in 1880 s

in 1880 s
Clearing of mountain forest to plant coffee

Tuesday, September 21, 2010

மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் புதிய செல்நெறி நோக்கி .....
1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அண்மைக்காலம் வரை பல பாரிய இலக்கியப் பணிகளை நிறைவேற்றி உள்ளது. இன்றும் கூட அதன் செயற்பாட்டை மலையகம், ஏனைய பிரதேசங்கள், சர்வதேசம் என விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நவீன சிந்தனைச் செல்நெறிகள் மற்றும் அடுத்த பரம்பரையினரினருக்கு அவற்றை எடுத்துச் செல்லுதல் முதலானவற்றைக் கருத்திற் கொண்டு சகல மலைநாட்டு எழுத்தாளர்களையும் எம்முடன்  இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.

இவ்வாறு மலைநாட்டின் மூத்த எழுத்தாளரும், சர்வதேச எழுத்தாளர் வரிசையில் தன்னையும்  நிலை நிறுத்திக்கொண்டவருமான தெளிவத்தை ஜோசப் தெரிவித்தார்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை புதிய செல்நெறிநோக்கி அழைத்துச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.  இக்கூட்டம் கடந்த ஞாயிறன்று கொழும்பு  12,
 152 1/5, ஹல்ப்ஸ்டோப் வீதி என்ற இடத்தில் இடம் பெற்றது.

மேற்படி கூட்டத்தில் பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

1)  மலைநாட்டு எழுத்தாளர் midtiuயும் ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி விபரத்திரட்டு என்பவற்றை ஆவணப்படுத்தலும் பேணுதலும்.

2) ஏனைய பிராந்திய, சர்வதேச எழுத்தாளர்களுடனும், அமைப்புக்களுடனும், ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல்.

3) அங்கத்துவ எழுத்தாளர்களின் நூல்களையும் படைப்புக்களையும் பதிப்பித்து வெளியிடுதல்.

4) சமூக, கலை, இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிடுதல்.

5) இணையத்தளம் ஒன்றை ஏற்படுத்துதல்.

6) இளைய தலைமுறையினர், மாணவர்களுக்கான  இலக்கிய கருத்தரங்குகள், பட்டறைகள், பாசறை கள் நடத்துதல்.

7)  மன்றத்துக்கென செயலகம் ஒன்றை உருவாக்குதல்.

8) மலைநாட்டு இலக்கிய கலை  கலாசார சமூக, விழுமியங்களைப் பேணும்வகையில் ஆய்வுகள்
செய்தலும் ஆவணப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதலும்.

9) எழுத்தாளர் உதவி ஊக்குவிப்பு, கல்வி மற்றும் இடர் நிதியமொன்றை ஏற்படுத்துதல்.
* இந்நிதியத்தின் வாயிலாக நலிந்த நோய்வாய்ப்பட்ட எழுத்தாளர், கலைஞர்களுக்கு     உதவுதல்.
     * எழுத்தளர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.
     * எழுத்தாளர் மற்றும் அவர்களின் குடும்பங்களில் மரணத்தின்போது உதவுதல்.

10) பவளவிழா, மணிவிழா, வெள்ளிவிழா வயதடைந்த எழுத்தாளர்களை இனங்கண்டு ஆவணப்படுத்துவதுடன் அவர்களுக்கு உரிய பாராட்டு விழாக்களை நடத்துதல்.

11) வருடாந்தம் நாவல், சிறுகதை, கவிதை மற்றும் கலைகலாசாரப் போட்டிகளை  நிகழ்த்துதல்.

12)  மாணவர் சமூகத்தின்  ஆக்கத்திறனை வளர்க்கும் விதத்தில் அவர்கள் மத்தியிலும் மேற்படி  இலக்கிய, கலை கலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல்.

13) நல்ல தமிழை வளர்க்கும் பொருட்டு பாடசாலை மட்டத்தில் திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்ததல். (உ+ம்) பண்டிதர் பரீட்சையை  மலையகத்துக்கும் விஸ்தரித்தல்)

14) பொதுவான  மலையக சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்கான பங்களிப்பைச் செய்தல்.

15) பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களில் எழுத்தாளர்கள் மற்றும் ஆக்க இலக்கியத்துக்கான வகிவாகத்தைப் பெற  அழுத்தம் கொடுத்தல்.

இந்நோக்கங்களை செயற்படுத்த பின்வரும் செயற்குழு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

போஷகர்;       : பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
தலைவர்       : தெளிவத்தை ஜோசப்
உபதலைவர்    : ப.ஆப்தீன், மு. சிவலிங்கம்.
இணைச் செயலாளர்கள்; : ,ரா. சடகோபன், ஜி. சேனாதிராஜா

பொருளாளர்    : கே.பொன்னுத்துரை செயற்குழு உறுப்பினர்கள்.
1. சு.முரளீதரன்            2. பானா தங்கம்
3. எம். திலகர்             4. விசு.கருணாநிதி
5. ரா.  நித்தியானந்தன்     6. கனிவுமதி
7. லுணுகலை ஸ்ரீ          8. இரா. பாரதி
9. ஸ்ரீதரன்                 10. gp. வீரசிங்கம்
11. rp;.rptFkhh;      12. v];.mUs;rj;jpaehjd;

தொடர்பு முகவரி ;    செயலாளர்
மலைநாட்டு எமுத்தாளர் மன்றம்,
152 1/5,  ஹல்ப்ஸ்டோப் வீதி,கொழும்பு  12.
தொலைபேசி :
   0777 679231 ( இரா. சடகோபன்)
                                  0777 708948 (ஜி. சேனாதிராஜா)
மின்னஞ்சல்:; memmandram@yahoo.com
        

No comments:

Post a Comment